1929 -ஆம்ஆண்டு, கவிட்சர்லாந்துக்குச் செல்லும் கப்பலில் ஃப்ராங்மோரில் பயணம் செய்தார். அவரைக் கவனித்துக் கொண்ட மாலுமி ஒவ்வொருநாள் இரவும் அவரை ஓர் அறைக்குள் அடைத்துப் போட்டு விடுவார். காலையில் உணவிற்குப் பிறகு, கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய அனுமதிப்பார், பிறகு கப்பர்தளத்தில் உலாவுவதற்கு அழைத்துச் செல்வார். ஒரு நாயை அதனுடைய எஜமான் அழைத்துச் செல்வது போல் இருக்கும். பிறகு அங்குள்ள ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார். யாராவது ஒரு பயணி அவரை அழைத்தால் அவரோடு போவதற்கு அந்த மாலுமி அனுமதிக்கமாட்டார்.
ஃப்ராங்க்மோரிஸ் ஒரு சிறுவன் அல்ல; அவர் பெரியவர்தாள். பெரியவர்களுக்குள்ள எல்லா ஆசைகளும் அவருக்கும் இருந்தன. ஆனால், அவருக்குக் கண்தெரியாது. அதனால், அவர் தன்னைத்தானே கவனித்துக் கொண்டிருக்க முடியாது என்று அந்தமாலுமி நினைத்துக்கொண்டார். எனவே, ஃப்ராங்கை அவர் ஒரு பொருளைக் காப்பாற்றியது போலக் காப்பாற்றினார்.
ஆனால், சுவிட்சர்லாந்துக்குப் போன பின் எல்லாம் மாறிவிட்டது. கண் தெரியாதோரை வழிநடத்துவதற்குப் பழக்கப்பட்ட நாய்களைப் பற்றி அவர் கற்றுக்கொண்டார். தன்னுடன் அப்படிப்பட்ட ஒருநாயை அழைத்துக்கொண்டு அமெரிக்கா திரும்பினார். அங்கே, ‘பார்க்கும்கண்’ எனும் நிறுவனத்தைத் துவக்கினார். அது இப்போது உலகளாவிய ஒரு நிறுவனம்.
இப்போது ஃப்ராங்க் தனது நாயுடன் எங்குவேண்டுமானாலும். எப்போது வேண்டுமானாலும், எவரோடு வேண்டுமானாலும் செல்லலாம். ஒருமுறை நிருபர்கள் முன்னிலையில், அந்த நாய் அவரை நியூயார்க்நகரத்தின் சந்தடியான ஒரு சாலையின் குறுக்கே திறமையாக அழைத்துச் சென்றது. வாகனங்கள் விரைந்து கொண்டிருந்த சூழ்நிலையில் இவ்வாறு நடந்தது. பார்வையுள்ள நிருபர்கள் கூட இந்தச்சாலையைக் கடப்பதற்குச் சிரமப்பட்டார்கள். அந்த நாயின் பாதுகாப்பில் இருக்கும்போது ஃப்ராங்குக்குப் பயம் இல்லை.
அதைவிட நல்ல ஒருவழிகாட்டி நமக்கு இருக்கிறார். அவருடைய கையில் தம்மை ஒப்படைத்துவிட்டால், எதற்கும் பயப்படத் தேவையில்லை, அவர் தான் பரிசுத்தஆவியானவர். நம்முடைய பாவஇயல்பு நமக்கு ஓர் ஊனமாகும். நம் எல்லோருக்கும் இந்த ஊளம் இருக்கிறது. ஆனாலும், நம்முடைய வழிகாட்டியிடம் நம்மை முற்றிலுமாக ஒப்படைப்பதற்கு நம்மிடம் தயக்கம்காணப்படுகிறது. உண்மையான விடுதலை எங்கே என்பதை இந்தப் பாடத்தில் கண்டு கொள்வோம்.