“தேவன் என்று ஒருவர் இருப்பாரோ?”எனும் மனப்போராட்டம் எப்போதாவது உங்களுக்கு இருந்தது உண்டா? இவ்வாறு நாத்திகர் ஒருவரிடம் அவர் நண்பர்கேட்டார். நாத்திகர் பதில்சொன்னார். நண்பருக்குத் தூக்கிவாரிப் போட்டது. நண்பர் அந்தப்பதிலை எதிர்பார்க்கவில்லை
”ஆம். எனக்கு அந்தப் போராட்டம் இருந்தது. பலஆண்டுகளுக்கு முன் அது நடந்தது. அது என்முதற்பிள்ளை பிறந்தநேரம், தொட்டிலில் கிடந்த அந்தப் பிள்ளை தன் பிஞ்சுவிரல்களை அசைத்தபோது, என் உள்ளமும் அசைந்தது. அந்தச் சின்ன கண்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டபோது, கடவுளை நான் கண்டுகொண்டதாக உணர்ந்தேன். அந்தக் காலக் கட்டத்தில் பலமாதங்கள் நான் நாத்திகத்தை மறந்து போனேன். அந்தக் குழந்தையைப் பார்த்தபோதெல்லாம், ‘தேவன் என்று ஒருவர் உண்டு’ என்று கொஞ்சங்குறைய நம்பிவிட்டேன். ”