பௌன்ட்டி (Bounty) என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கப்பல். அதில் கப்பல் தலைவனுக்கு எதிராகக் கலகம் செய்த சிலர் அவரையும் அவர் சகாக்களையும் துரத்திவிட்டு, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். தென்பசிபிக் பெருங்கடவில் இருந்த பிட்கேரின் எனும் ஆளில்லாத் தீவுக்குக் கப்பல் வந்து சேர்ந்தது. அந்தக் கலகக்கூட்டத்தில் ஒன்பது பேர் பிரிட்டிஷ் மாலுமிகள்; ஆறு பேர் தாகித்திய ஆண்கள்: பத்துபேர் தாகித்திய பெண்கள்! ஒருத்தி 15 வயது சிறுமி.
அங்கு மதுபானம் வடிப்பதை ஒருமாலுமி கண்டுபிடித்தாள். எல்லாரும் குடிகாரர்கள் ஆனார்கள். புதுக் குடியிருப்பில் சண்டை ஏற்பட்டது. கொலைகள் நிகழ்ந்தன. கொஞ்சக்காலத்தில் ஆண்களில் அலெக்சாண்டர்ஸ்மித் என்பவர் மட்டுமே தப்பிப் பிழைத்தார். கப்பலிலிருந்து கொண்டு வந்திருந்த பெட்டி ஒன்றில் அவர் ஒருநாள் ஒருவேதாகமத்தைப் பார்த்தார். அதை அவர் வாசித்தார்; மற்றவர்களுக்குப் போதித்தார். அவர் வாழ்க்கை மாறியது: தீவிலிருந்த அனைவர் வாழ்க்கையும் மாறியது.
அந்தத் தீவுவாசிகளுக்கும் வெளி உலகத்திற்கும் 1808 வரை எந்தத் தொடர்பும் இல்லை. அந்த ஆண்டில் டோப்பாஸ் எனும் அமெரிக்கக் கப்பல் அந்தத் தீவுக்கு வந்தது. அப்போது அந்தத் தீவில் விஸ்கி இல்லை: குற்றம்இல்லை; சிறைச்சாலை இல்லை. வளமான வாழ்க்கை வாழும் நல்லவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒரு காலத்தில் நரகமாய் இருந்த அந்த இடம் பூவுலகச் சொர்க்கமாய் ருந்தது. தேவன் விரும்பும் வண்ணமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம்என்ன? வேதாகமம்.
வேதாகமத்தின் மூலமாக மக்களுடன் தேவன் இன்னும் பேசுகிறாரா? வேதபாடங்களைப் படிக்கும் ஒருநபர் தனது விடைத்தாளில் பின்வருமாறு எழுதியிருந்தார்: “நான் மரண தண்டனைக் குற்றவாளி. இந்த வேதபாடங்களைப் படிக்கும் முன் நான் நம்பிக்கை அற்றவனாக இருந்தேன். இப்போது அப்படி இல்லை. என்னிடம் அன்பு காட்ட ஒருவர் இருக்கிறார். நான் புதுவாழ்வை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.”
ஆம். மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை வேவதாகமத்திற்கு உண்டு. வேதாகமத்தை உண்மையாகப் படித்தால், வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.