சில நாட்களில் பொழுதுவிடியும் போது, எங்கும் பரதீசாய்த் தெரிகிறது. ஆதவனின் பொன்னிறக் கதிர்கள் மரத்தின் இலைகள் மேல்பட்டுத் தெறிக்கின்றன. நினைக்கும் போதே குதூகலம் தரும் அனுபவங்கள் உண்டு. நண்பனின் பாசம், இசையின் தாக்கம், சிறுகுழந்தை ஒன்றின் அன்புச்செயல் – இப்படி எத்தனை எத்தனையோ!
ஆனால், சிலநாட்கள் பயங்கரமாய் விடிகின்றன. தீவிரவாதியின் தாக்குதல், வெள்ளம், நிலநடுக்கம், புயல் என்று இயற்கையின் சீற்றங்கள். பசியால் விவசாயிசாவு இவ்வாறு செய்தித்தாட்கள் அமைதியாய் வீறிடும் போது, மனம் பதைபதைக்கிறது. வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று கேட்கத் தோன்றுகிறது. எதுவும் சரியில்லை என்று கத்தவேண்டும் போல இருக்கிறது.
நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? என் மேல் தேவனுக்கு ஏதாவது அக்கறை இருக்கிறதா?