ஆளில்லாத் தீவு. அதன் பெயர் அசென்ஸன் ஐலண்ட். அது இருப்பது அட்லாண்டிக் பெருங்கடலின் நடுப்பகுதியில். 1725 ஆம்ஆண்டில் அங்கு ஓர் ஆளை இறக்கிவிட்டது ஹாலந்து நாட்டுக்கப்பல் ஒன்று. அந்த நபர் ஒருமாலுமி. அவர் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக அவர் அங்கு இறக்கி விடப்பட்டார். அவர் அதில் நான்கு மாதங்கள் உயிருடன்இருந்தார்.
ஒரு குடிசைபோட்டு அதில் குடியிருந்தார். தாகத்தைத் தீர்த்துக்கொள்ள, கடல் ஆமைகளின் இரத்தத்தைக் குடித்தார். தான்பட்ட அவஸ்தைகள் அனைத்தையும் எழுதி வைத்திருக்கிறார். நான்கு மாதங்களும் அவர்அடைந்த உடல் உபாதைகளை விட அவர் பட்ட மனவேதனை கொடூரமானது. அவர் எழுதிவைத்துள்ள குறிப்பேட்டிலிருந்து இதுதெரிகிறது. குற்றஉணர்வு அவரை வெகுவாக வாதித்தது.
“நீதியின் பாதையை விட்டுவிலகி, சபிக்கப்பட்டவர்களின் தொகையைப் பெருக்கும் ஈனர்களுக்கு வரும்வேதனை தான் என்னே!’’ என்று அவர் எழுதி இருக்கிறார். மனிதர்களை விட்டுப் பிரிந்ததைவிட, தேவனை விட்டுப்பிரிந்த வேதனை தான் அவரை அதிகம் வருத்தியது. இறுதியில் அது தாங்கமுடியாத அளவுக்கு வளர்ந்தது.
ஆதாமும் அவன் மனைவியும் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்களே. (ஆதி 3:8) அன்றிலிருந்து இன்றுவரை இந்தத்தனிமையானது மனிதரை வாட்டிக்கொண்டே இருக்கிறது. வெட்கம், குற்றம், பயம் ஆகியஉணர்வுகள் அன்று அவர்களுக்குப் புதிதானவை. எனவே, தேவன் அழைத்தபோது, ஓடி ஒளிந்துகொண்டார்கள். இன்று, நமக்கு அவை பழகிப்போன உணர்வுகள்.
நமக்கும் தேவனுக்கும் பிரிவினை உண்டாக்குவது எது?
“உங்கள்அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினைஉண்டாக்குகிறது.’ஏசா 59:2.
தேவனிடமிருந்து பாவிகளைப் பிரிக்கும் படுபாதாளத்தைத் தேவன் உண்டாக்கவில்லை. ஆதாம்-ஏவாளைவிட்டு ஆண்டவர் ஓடவில்லை; அவர்கள் தாம் ஆண்டவரை விட்டு ஓடினார்கள்.