லிம் என்பவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பௌத்தராகக் கழித்தவர். பின்பு இவர் கிறிஸ்தவரானார். இவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இவரிடம், “நீங்கள் பௌத்தராக இருந்ததற்கும் கிறிஸ்தவராக இருப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணருகிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு லிம், “இப்போது என் மனதில் அமைதி இருக்கிறது என்று பதில் சொன்னார்.
கிறிஸ்துவிடம் வரும் போது அது தான் நிகழ்கிறது. “உம்மை (தேவன்) உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன்உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” ஏசா 26:3.
இதைக் கண்டு கொண்டவர்கள் தான் புதுவாழ்வு வாழ வழியைக் கண்டு கொண்டவர்கள். ஒரே ஒரு வழிதான் உண்டு. அது இயேசு.