பேட்ரிஷியா மிரசெக்கும், டேவிட்மிரசெக்கும் குழந்தை நல மருத்துவர்கள். பலவித வியாதிகளினால் அவதிப்படும் ஏராளமான குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதில் அவர்களுக்கு மிகுந்த வேதனையைத் தந்த காரியம் என்னவென்றால், சிலகுழந்தைகள் நலமடைந்து விடுகிறார்கள்: சில குழந்தைகள் மரித்து விடுகின்றார்கள்.
சில குழந்தைகள் வளரும்போது கல்லூரிக்குச் செல்கிறார்கள்: சில குழந்தைகள் போதை மருந்துக்குச் செல்கிறார்கள். பெற்றோரால் திட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெற்றோராகும் போது, சிலர் தங்கள் குழந்தைகளைத் திட்டும் பெற்றோராக மாறுகிறார்கள். சிலர் நல்லபெற்றோராக மாறுகிறார்கள். இது ஏன்?
இதைப் புரிந்து கொள்வதற்காக இந்தத் தம்பதியர் ஆய்வுசெய்தார்கள். நல்ல நிலைக்கு வந்த அனைவரிடமும் ஒரு குறிப்பிட்ட தன்மை இருந்ததைப் பார்த்தார்கள். அது இதுதான்: “எல்லாம் நன்மையாக நடக்கும் எனும் எதிர்பார்ப்பு.’
இந்த எதிர்பார்ப்பு தான் இந்தப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. நமக்கு எதிராகத் துன்பங்கள் அடுக்கடுக்காக வரும்போது, எதிர்பார்ப்பு அனைத்தையும் மாற்றிப்போடுகிறது.
நல்ல எதிர்பார்ப்பு மனிதர்களுக்கு மிகவு ம்அவசியம். அதை எப்படி பெற்றுக்கொள்வது? இந்தஉலகம் அதை நமக்குத் தர முடியாது. வேதாகம் தீர்க்கதரிசனத்திலிருந்து தமக்கு நல்ல எதிர்பார்ப்பு உண்டாயிருக்கிறது. அநேக மனிதர்களுக்கு உயிருள்ள ஓர் எதிர்பார்ப்பைத் தந்த ஒருதீர்க்கதரிசனத்தை இந்தப் பாடத்தில் படிப்போம்.