அர்மாண்டோ வல்லடேர் எனும் அந்தக் கிறிஸ்தவருக்கு க்யூபாவில் 30 ஆண்டு தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் செய்த குற்றம்? கிறிஸ்துமஸ் தினம் ஒன்றில் ஓர் ஆலயத்தில் அவர் ஜெபம் செய்துவிட்டாராம். இந்தக் குற்றத்திற்காக சிறையில் அடைத்து, சித்தரவதை செய்தார்கள்; உடல் மெலிந்துபோனார். ஆனால், அவர் விசுவாசம் மெலியவில்லை: உள்ளம் சோர்ந்து போகவில்லை.
தன் உறுதியில் இறுதிவரை அவர் நிலைத்து நின்றதற்குக் காரணம்என்ன? மார்த்தாள் எனும் இளம்பெண்ணுக்கு அவர் கொடுத்த வாக்குறுதி தான் காரணம். அவர் சிறைக்கு வந்த ஆரம்பநாட்களில் அந்தப்பெண்ணை அவர் சந்தித்தார். அவருடைய விசுவாசத்தால் அவள் ஈர்க்கப்பட்டாள். சிறையின் தாழ்வாரத்தில் நடந்த ஒரு கிடங்கில் அவர்கள் கணவன் மனைவியானார்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகு அவள் நாடு கடத்தப்பட்டாள். அவள் மியாமியில் குடியேறினாள். அந்தப் பிரிவு மிகவேதனையானது. நாட்டைவிட்டு அவள் வெளியேறுமுன் கிழிந்த காகிதம் ஒன்றில் அவளுக்கு ஒருசெய்தியை அர்மாண்டோ அனுப்பினார். அதில் பின்வருமாறு அவர் கிறுக்கி இருந்தார். “நான் நிச்சயம் வருவேன். என் முதுகுக்குப் பின் இருக்கும் துப்பாக்கி என்னை ஒன்றும் செய்து விட முடியாது.
மார்த்தாளுவுடன் நடந்த தன்னுடைய திருமணத்தை எப்படியாவது ஓர் ஆலயத்தில் உறுதிசெய்து விடவேண்டும் என்பதில் அர்மாண்டோ உறுதியாகஇருந்தார். மார்த்தாளும் உறுதியாகஇருந்தாள். தன்கணவனுடைய துயரநிலையைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு மார்த்தாள் அயராமல் உழைத்தாள். அவள் தன் நம்பிக்கையை விட்டு விடவேஇல்லை. இருவரையும் உறுதியுடன் நிற்கச் செய்தது அர்மாண்டோவின் வாக்குறுதியே.