“எதிர்காலத்தை அறியவேண்டும்” எனும் ஆசை நம்மில் அநேகருக்கு இருக்கிறது. அடுத்தநாள் நடக்கப்போவது என்ன? என்பதை அறிய விரும்புகிறோம். ஆனால், துல்லியமான முன்னுரைத்தலைக் கேட்டல்அரிது. நாளைக்கு மழைபெய்யுமா, பெய்யாதா என்பதைக் கூட சொல்ல முடிவது இல்லை.
ஆனால், ஒருவர் இருக்கிறார். துல்லியமான தீர்க்கதரிசனங்களை அவரால் சொல்லமுடியும். அவர் இயேசுகிறிஸ்து. தம் வார்த்தையின் மூலமாக நம்மை எதிர்காலத்திற்குள் அழைத்துச் செல்ல அவரால் முடியும். அவர் நம்பிக்கையான வழிகாட்டி. தமது இரண்டாம் வருகையைக் குறித்து அவர் கூறியிருக்கிற தீர்க்க தரிசனங்களை இந்தப் பாடத்தில் படிக்கப் போகிறோம். உலகத்தின் இறுதியில் நடக்கப்போகிற சம்பவங்களை அவர் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்லமுடியும்? அவர் தானே உலகத்தை உண்டாக்கினவர்.