ஸ்காட்லண்ட் நாடு. சிறுவன் பெயர் பீட்டர். ஒரு நாள் இரவில் வழிதப்பி வனாந்தரத்துக்குள் அலைந்து கொண்டிருந்தான். திடீரென்று வானத்திலிருந்து, “பீட்டர்” என்று தேவசத்தம் கேட்டது. உடனே நின்றான்.
தனக்கு முன் நிலத்தை உற்றுப்பார்த்த போது திகைத்தான். முன்னே அதல பாதாளம். சுண்ணாம்புக்கல் தோண்டியெடுத்த பெரும் பள்ளம். அடுத்த அடி எடுத்து வைத்திருந்தால் உள்ளே விழுந்திருப்பான்.
‘இவ்வாறு என்னோடும் தேவன் பேசினால் நன்றாயிருக்கும்’ என்று எண்ணுகிறீர்களா? நாம் அவர் அருகில் உட்கார்ந்து, நம்முடைய கனவுகளையும் சிரமங்களையும் குறித்து அவருடன் உரையாட முடிந்தால் அது எப்படி இருக்கும்?